அடிக்கும் வெயிலில் குளிர்ச்சியான தகவல்!! அடுத்த 5 நாட்களுக்கு மழை அலர்ட்!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கடும் வெயிலுக்கு இடையே, ஏப்ரல் 5 ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெப்பத்தால் அவதிப்படும் மக்களுக்கு சற்றே நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் பல பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருவதால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை சாத்தியம் உள்ளது.

ஏப்ரல் 1 மற்றும் 2 தேதிகளில் தென் கடலோர மற்றும் மலைப்பகுதிகளில் மழை நீடிக்கும். ஏப்ரல் 3-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், மலை மற்றும் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை. எனினும், சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு, அதிகபட்ச வெப்பநிலை 34–35°C மற்றும் குறைந்தபட்சம் 25–26°C ஆக இருக்கும்.

மொத்தத்தில், கடும் வெயிலுக்கு இடையே இடைக்கிடையே பெய்யும் மழை மக்களுக்கு சற்றே நிம்மதி தரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram