கிரிக்கெட்: இந்திய அணியின் முக்கிய வீரரான கே எல் ராகுல் இடம் குறித்து இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது இறுதிப் போட்டியை நெருக்கி வருகிறது நாளை மறுநாள் இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கோப்பையை வெல்ல இரு அணிகளும் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் தற்போதைய விக்கெட் கீப்பராக விளையாடி வருபவர் கே எல் ராகுல்.
இவர் ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சிக்ஸ் அடித்து போட்டியை வெற்றி பெறச் செய்தது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டி வருகின்றனர். மேலும் அவர் ஐந்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்க இருந்த நிலையில் அக்சர்பட்டில் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் அவர் ஐந்தாவது இடத்தில் களம் இறக்கப்பட்டார் கே.எல் ராகுல் ஆறாவதாக களம் இறக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்திய அணி முன்னாள் வீரர் நவஜோத் சிங் சித்து இது குறித்து கூறுகையில் கே.எல். ராகுலை ஒரு காரின் உதிரி டயர் போல இஷ்டத்திற்கு மாற்றி விளையாட வைக்கிறது இந்திய அணி நிர்வாகம். கேஎல் ராகுல் இந்திய அணியில் தொடக்க வீரராக மூன்றாவது வீரராக ஐந்தாவது வீரராக ஆறாவது வீரராக எந்த இடத்தில் வேண்டுமோ அப்படி இஷ்டத்திற்கு மாற்றி மாற்றி விளையாடுகிறது. இது மிகவும் தவறான ஒரு விஷயம் ஆனால் கே எல் ராகுல் நனைத்த இடங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வேராக களம் இறக்கப்பட்டார் அடுத்த போட்டியிலேயே மூன்றாவது வீரராகவும் களம் இறக்கப்பட்டார் ஆனால் அவர் எந்த வரிசையில் களமிறங்குகிறாரோ அந்த வரிசை சிறப்பாக விளையாடி வருகிறார் எனவும் பாராட்டியுள்ளார்.





