DHARMAPURI: நகர்ப்புறங்களில் தான் டிடிஎச் மற்றும் ஓடிபி தலங்கள் ஹாட்ஸ்டார் நெட்ஃபிக்ஸ் என டிவியில் இணைத்து தேவையான திரைப்படங்கள் மற்றும் தேவையான சீரியல்கள் மக்கள் பார்த்து வருகின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் இன்னும் கேபிள் டிவி நெட்வொர்க் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதுபோன்று கேபிள் நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும் உள்ளூர் ஒளிபரப்பு சேனல்களில் ஒரு சில சமயங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதுண்டு அதுபோன்ற சம்பவம் தான் தர்மபுரியில் அரங்கேறி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கேபிள் தனியார் டிவி சேனலில் நேற்று ஆபாச படம் ஒளிபரப்பானதனால் அந்த சேனலை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அதிமுக ஆட்சியில் குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கேபிள் துவங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கேபிள் டிவி இன் தரம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருக்கும்போது நேற்று மதியம் தர்மபுரி மாவட்டத்தின் தனியார் சேனல் ஒன்றில் ஆபாச படம் ஒளிபரப்பானதாக கூறப்படுகிறது. அந்த சேனலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தகவல் தெரிந்தால் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தர்மபுரியின் அரசு கேபிள் டிவி தாசில்தார் இதை குறித்து கூறுகையில், அந்த தனியார் சேனல் ஆனது சேலம் மாவட்டத்தை சேர்ந்தது இதுகுறித்து தகவல் முழுவதாக தெரிந்த பின் சம்பந்தப்பட்ட சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.