தங்கப்பந்து விருது யாருக்கு?? பட்டியலில் உள்ள முதல் நான்கு பேர் யார்??

Who won the Golden Ball award

கிரிக்கெட் : இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டி ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தங்கப்பது விருது யாருக்கு என பேசப்பட்டு வருகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொலை 25 ஆம் ஆண்டுக்கான இறுதி போட்டி நாளை மறுநாள் இந்தியா மற்றும் நியூசிலாந்து நடைபெற உள்ளது. முதல் அறையில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பின் இரண்டாவது அறையில் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதை எதிர்பார்த்த நிலையில் திருப்பமாக நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி இமாலய இலக்கை நிர்ணயித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.

இந்நிலையில் தற்போது தங்கப்பது விருது யாருக்கு என குழப்பத்தில் ஆழ்ந்த உள்ளனர் ரசிகர்கள். இந்த தங்க பந்து விருது இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வீரருக்கு வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இதில் முதலிடத்தில் நியூசிலாந்தின் மேட் ஹென்றி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆனால் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நான்காவது இடத்தில் நியூசிலாந்தின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதனால் முதல் நான்கு இடத்தில் உள்ள வீரர்கள் அனைவருமே இந்த இறுதிப் போட்டியில் விளையாடும் படி இரு அணிகளில் உள்ள வீரர்களுக்கு மட்டும் இடம்பிடித்துள்ளது. குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது இதில் யார் இந்த விருதை வெல்வார் என்று குழப்பம் நீடிக்கிறது இறுதி போட்டியில் முகமது சாமி மேட் ஹென்றியை விட ஒரு விக்கெட் அதிகமாக வீழ்த்த வேண்டும். மேலும் இதில் வருண் சக்கரவர்த்தி இந்த விருதை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது எனில் அவர் இந்த மைதானத்தில் ஒருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் மேட் ஹென்றியும் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியது கவனிக்கத்தக்கது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram