தமிழ்நாட்டில் தற்போது குழந்தைகள் பாலியல் தொல்லை மற்றும் கொலை கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது அதே போல தான் குடும்பத்தில் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. அது போன்ற ஒரு சம்பவம் தான் தஞ்சையில் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி அருகே பருத்தி கோட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் தமிழரசன் ரேவதி. இருவரும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு புவனேஸ்வரி என்கிற மகளும் உண்டு இவருக்கு 20 வயதாகிறது. இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு பகுதியில் உள்ள சபரி என்கிற இளைஞரை காதலித்து வந்தார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். செய்த பின் இருவரும் தமிழரசன் ரேவதி வேலை செய்த அதே செங்கல் சூளையில் தங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சபரி புவனேஸ்வரி இருந்து குடிசையில் இருந்து அலறல் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதனால் அருகில் இருந்து அக்கம் பக்கத்தில் ஓடிப் போய் பார்த்தபோது புவனேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கடந்துள்ளார்.
கணவர் சபரியோ அங்கிருந்து அவசரமாக ஓடியுள்ளார். அதன்பின் புவனேஸ்வரி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அக்கம் பக்கத்தினர் சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி உயிரிழந்தார். மேலும் தப்பி ஓடிய சபரியை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகிறது இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை இந்த கொலை சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.