திடீர் ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கண்டு அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தோம். பலரும் இனி எட்டாத கனவு தங்கம் என்று முடிவே செய்து விட்டனர். சிலர் நகை சீட்டு போட்டு தங்கத்தை சேர்த்து வைக்க முற்பட்டு உள்ளனர். எனினும், தங்கத்தின் இந்த உச்சமானது பலருக்கும் எட்டாத கனியாகவே உள்ளது. இன்றைய நிலவரப் படி, 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 8,716. இதன் நேற்றைய விலையானது 8,749. 33 ரூபாய் விலை கம்மியாக விற்கப்படுகின்றது. இதன் ஒரு பவுனின் விலை ₹. 69,728. இது நேற்றைய விலையை விட 224 ரூபாய் குறைவாக உள்ளது. எனினும், அடுத்து இது எந்த உச்சத்தை தொடும் என்ற பரபரப்பு பலரின் மத்தியில் உள்ளது.
அதேபோல் 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 7,990. இதன் நேற்றைய விலை ஆனது ரூ.8020. இதுவும் நேற்றைய விலையை விட 30 ரூபாய் கம்மியாக விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுனின் விலை ரூ. 63,920. இது நேற்றைய விலையை விட 240 ரூபாய் கம்மியாக விற்கப்படுகின்றது. வெள்ளி விலை ஆனதும் சராசரியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. வெள்ளி ஒரு கிராமின் விலை ரூபாய் 108.10. இது நேற்றைய விலையை விட பத்து பைசா கூடுதலாக விற்கப்படுகிறது. இதன் ஒரு கிலோவின் விலை 100 ரூபாய் ஏற்றத்துடன் காணப்படுகிறது.