தற்போது தமிழகத்தில் கொலை கொள்ளை கற்பழிப்பு என அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் எங்காவது கொலை அல்லது பாலியல் துன்புறுத்தல் போன்ற செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பெண் அல்லது சிறுமி வெளியில் செல்ல அஞ்சப்படும் நிலைமையில் தான் தமிழகம் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் சேலத்தில் ஏற்காடு பகுதியில் நடைபெற்றது.
இரண்டு நாட்களுக்கு முன் காதலன் காதலியை ஏற்காடு மலை பாதையில் சென்று கொலை செய்தது சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது அந்த கொலையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அவர் முதற்கட்ட விசாரணையில் காதலியை ஏற்காடு அழைத்துச் சென்று மலை மீது தள்ளி விட்டதாகவும் விசுவைத்துக் கொண்டதாகவும் மாறி மாறி கூறிவந்த நிலையில் அடுத்த கட்ட விசாரணையில் காதலிக்கு விஷ ஊசி போட்டு அவர் கொலை செய்தது அம்பலமானது. திருச்சியில் உள்ள துறையுறை சேர்ந்த லோகநாயகி என்ற தனியார் பயிற்சி மைய ஆசிரியை இவர் சேலம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார். இவர் நான்கு நாட்களாக காணவில்லை என விசாரணை மேற்கொண்டதில் அவருடன் அடிக்கடி மொபைல் போனில் பேசியது அப்துல் ஹபீஸ் என்பதே தெரியவந்தது.
லோகநாயகி மற்றும் அப்துல் ஆஃபீஸ் இருவருக்கும் பழக்கம் இருந்து அது காதலாக மாறியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காதலித்து வந்த நிலையில் அப்துல் ஆபீஸ் மற்றொரு பெண்ணுடன் பழகி லோகநாயகியை தவிர்க்க முயற்சி செய்து வந்துள்ளார் அப்போது லோகநாயகி திருமண பேச்சை எடுத்துள்ளார். இதனை தொல்லையாக நினைத்து அப்துல் ஆஃபீஸ் மற்றொரு காதலி மற்றும் அவருடைய தோழியிடம் உதவி கேட்டு அவர்கள் இணைந்து லோகநாய்க்கு விஷ ஊசி போட்டு வாடகை கார் எடுத்துக்கொண்டு ஒன்றாம் தேதி ஏற்காட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து மயக்கம் அடைய செய்து பின்னர் விசு ஊசி போட்டுள்ளனர் இறந்தவுடன் ஏற்காடு மலைப்பாதையில் ஒரு பாலத்திலிருந்து தூக்கி வீசி விட்டு சென்றுள்ளனர். இதைவிட ஒரு பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் காவியாவுக்காக லோகநாயகியை கொலை செய்த அப்துல் காவியாவை மட்டுமல்லாமல் அவருடைய தோழி மோனிஷா உடனும் காதலில் இருந்து உள்ளார். மேலும் இந்த மூவரும் இணைந்து லோகநாய்க்கு விஷ ஊசி போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. விசாரணையில் அப்துல் போனை பார்த்தபோது நிறைய ஆபாச படங்களாக வைத்துள்ளது தெரிய வந்தது இதுகுறித்து. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.