தமிழ் நடிகர்களுள் தற்போது இசையமைப்பாளராக இருந்து நடிப்பில் ஆர்வம் காட்டி வரவேற்பைப் பெற்ற நடிகர்களில் ஒருவர்தான் ஜிவி பிரகாஷ் குமார். இவர் இவர் இசை மற்றும் பாடலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு தற்போது அவர் படங்களில் நடிக்கும் ஆர்வத்தை அதிகப்படியாக காட்டி வருகிறார் அதனால் இவர் நடிப்பிற்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு இவருக்கு கடைசியாக கடந்த வருடம் ரெபல் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை என்றாலும் இந்தத் திரைப்படம் ஓரளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது எனவே கூறலாம்.
இந்நிலையில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் கிங்ஸ்டன் இந்த திரைப்படம் 1982 ஆம் ஆண்டில் நடந்த ஒரு விசித்திரமான கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை ஒரு கடலோரம் பாலும் மக்களின் மற்றும் கடலில் கடத்தல் காரணமாக இருக்கும் கிங்ஸ்டன் பற்றின ஒரு கதை. இதில் படத்தின் முதல் பாதி வரை படத்தின் முழு திரைக்கதைக்குள் நுழையாமல் இரண்டாவது பாதியில் தான் படத்தின் முக்கிய கதைக்குள் நுழையும் அம்சம் அமைந்துள்ளது.
அதன்படி தனது நண்பர்களுடன் கடலுக்கு செல்லும் ஜிவி பிரகாஷ் தனது நண்பர்களுடன் பேய் இருக்கும் நீருக்கும் நுழைந்து சாபம் பெற்ற அந்த உயிருக்கு நடுவில் மாட்டிக் கொள்கிறார். இதுபோல தனது கிராமத்திலிருந்து கடலுக்குச் செல்லும் நபர்கள் உயிருக்கு திரும்பாத போது தனது நண்பருடன் அதை கண்டுபிடிக்க கடலுக்குள் சென்ற ஜிவி பிரகாஷ் கடலில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடித்தார் உயிருடன் கரைக்கு திரும்பினாரா என்பது என்ற கதையை கருவூலமாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படம் தான் கிங்ஸ்டன். இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்படுகிறது.