பிரபல நடிகை நயன்தாராவிற்கு சமீபமாக ஹோலிவூட்டில் அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார். சில காலங்களுக்கு முன்பு நன்கு மார்க்கெட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். இருப்பினும் இந்த கேப்பை அவர், மகன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார். அதற்கு தகுந்தவாறு அவ்வப்போது அவர்கள் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருந்தன. மேலும், ரிசென்ட்டாக நடந்திருந்த femi 9 நிகழ்ச்சியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் அவர் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக அவர் குடும்பத்தோடு விரதம் இருப்பதாகவும் ஒரு செய்தி உலா வந்திருந்தது. பொதுவாக பட பிரமோஷனுக்கே செல்ல விரும்பாத நயன்தாரா, இந்தப் படத்தின் பூஜைக்கு வந்திருந்தார். அதுவே பலரால் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வந்திருந்தது.
அதிலும் குறிப்பாக அவருடன் இணைந்து பல முன்னணி நடிகைகளும் நடிக்கப் போவதாக அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் போது தெரிகிறது. நயன் ஏற்கனவே குசேலன் படத்தில் ஒரே ஒரு பாட்டிற்கு மம்தா மோகன்தாஸ் ஆட இருக்கிறார் என தெரிந்து அதனை முடியவே முடியாது என்று மறுத்திருந்தவர். இதனை பல பேட்டிகளில் மம்தா அவர்களே எடுத்துக் கூறியிருந்தார். மேலும் தன்னோடு நடிக்கும் சக நடிகைகள் முன்னணியில் இருக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக உள்ளவர். ஆனால் இப்படத்திலோ, முண்ணனி நடிகை மீனா, ரெஜினா கசான்டிரா, அபிநயா ஆகியோர் உடன் நடிக்க சம்மதித்து இருப்பது அவரின் மார்க்கெட் இழந்ததை தெளிவுபடுத்துமாறு உள்ளது.