பிரபல நடிகர் நாகார்ஜுனா அவர்களின் மகன் நாக சைதன்யாவும் மிகப் பிரபலமான நடிகர். அவர் முன்பு சம்பந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் மனம் ஒப்பு பிரிந்துள்ளனர். தற்சமயம் வரை சமந்தா திருமண வாழ்க்கையில் இணையவில்லை. ஆனால், நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து இரண்டாவது திருமணம் புரிந்து கொண்டுள்ளார். அவர்களது திருமணமும் சுற்றமும், நட்பும் சூழ வெகு விமர்சியாக நடைபெற்று இருந்தது.
அவர்கள் திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா நடித்திருந்த தண்டேல் திரைப்படம் 100 கோடி வசூலை பெற்றிருந்தது. இதனால் அதிக இன்புற்ற குடும்பம், தனது மருமகள் வந்த நேரம் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து உள்ளது என்று நாகர்ஜுனா பதிவிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்சமயம் அந்த மண ஜோடிகள் நெதர்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப் படங்களை சமூகவலைத்தலங்களில் பதிவிட்டும் வருகின்றனர். அந்தப் புகைப்படங்கள் நெட்டிஷன்களால் பெரும்பாலும் பகிரப்பட்டு வருகிறது.