திமுக நம்மை ஏமாற்றி விட்டது!! உங்களுக்காக நான் இருக்கிறேன்!! விஜய் வெளியிட்ட வீடியோ!!

Video posted by Vijay

மகளிர் தினமான இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இதில் திமுக நம்மை ஏமாற்றி விட்டது எனவும் கூறியுள்ளார் இது குறித்து அந்த வீடியோவில் அவர் கூறுகையில், எல்லாருக்கும் வணக்கம் இன்னைக்கு மகளிர் தினம் தமிழ்நாடு முழுக்க இருக்குற என்னுடைய அம்மா அக்கா தங்கச்சி தோழின்னு உங்க அத்தனை பேருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்கள்.

சந்தோஷம்தானே பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும் அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாத போ மின் செக்யூரிட்டியா இருக்கிறப்போ எந்த சந்தோஷமும் இருக்காது தானே அப்படின்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது என்ன செய்ய நீங்க நாம எல்லாருமே சேர்ந்து தான் இந்த திமுக கவர்மெண்ட்டை தேர்ந்தெடுத்தோம்.

ஆனா அவங்க எப்படி நம்மள ஏமாற்றுவாங்கன்னு இப்பதானே தெரியுது எல்லாமே இந்த மாறக்கூடியது தானே மாற்றத்திற்கு உரியது தானே கவலைப்படாதீங்க 2026ல நீங்கள் எல்லாரும் சேர்ந்து இல்ல நாம எல்லாரும் சேர்ந்து இந்த மகளிர் காண பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவங்கள மாத்துவோம் அதுக்கு இந்த மகளிர் தினமான இன்னைக்கு நாம எல்லாரும் சேர்ந்து உறுதி ஏற்போம் ஒன்னு மட்டும் சொல்றேன் எல்லா சூழ்நிலையிலும் உங்களுடைய ஒரு மகனா அண்ணனா தம்பியா தோழனா உங்களுடன் நிற்பேன். என்று அந்தப் பதிவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram