பிஎஃப் என்பது உங்கள் வருமானங்களில் ஒரு பகுதியை ஒதுக்கிக் கொண்டு சேமித்து வைப்பது. இதனை ஆத்திர, அவசர காலங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்காகவே இந்த செயல்முறை உருவாக்கப்பட்டு இருந்தது. ஓய்வு காலங்களுக்குப் பிறகு இது ஒரு பெருந்தொகையாக இருக்கும். அது அவர்களின் பிற்கால வாழ்வை பலப்படுத்தும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவை வேலையின்மை, அவசர செலவுகள் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கு பெரும்பாலும் உதவுகின்றன.
அந்த வகையில் இந்த பிஎஃப் கணக்கை அவசர தேவைக்காக எடுக்க விளையும் போது, பெரும்பாலும் மக்கள் சிரமத்திற்கு உட்படுத்தப் படுகின்றனர். இதன் காரணமாகவே, இ பி எஃப் ஓ செயலகம் பிஎஃப் நடைமுறையில் ஒரு புதிய மாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி பிஎஃப் கணக்கு வழக்குகள் இனிமேல் வங்கி சேவை போல தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஏடிஎம் செயலி போல் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும் என்று அறிவித்துள்ளது.
இந்த புதிய முறை மூலம் ஏதேனும் அவசர கிளைம்ஸ்கள், கணக்கில் ஏதேனும் மாற்றங்கள் ஆகியவற்றை எந்த வங்கியில் இருந்தும் செயல்படுத்த முடியும் என்று ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒரு புதிய செயல் முறையை அறிமுகம் செய்துள்ளார். இதன் மூலம் இனிமேல் பிஎஃப் கணக்குக்கு அலைய வேண்டிய தேவை இருக்காது. மேலும், அத்தியாவசிய சூழ்நிலையில் மக்கள் இதனை ஏதுவாக பயன்படுத்திக் கொள்ள வழி செய்யப்பட்டு வரவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை பலரும் வரவேற்கத்தக்க ஒன்று என்று பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.