கிரிக்கெட்: இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருபவர் கே எல் ராகுல். அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணி இரு அணிகளும் தீவிர வலைப்பேச்சு ஈடுபட்டுள்ளன. இந்திய அணி வெற்றி பெற்றால் மூன்றாவது கோப்பையும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் இரண்டாவது கோப்பையும் சேர்க்கும். இந்நிலையில் இரு அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் ஒரு சர்ச்சை கருத்து பகிரப்பட்டு வருகின்றன.
இந்திய அணியில் தற்போது முக்கிய தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர்தான் கேஎல் ராகுல் அவர் டெஸ்ட் போட்டி மற்றும் இதற்கு முன் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகள் நிதானமாக விளையாடி சர்ச்சையில் சிக்கி இருந்தாலும், தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றே கூறலாம்.
மேலும் நியூசிலாந்து அணி உடனான போட்டி மற்றும் ஆஸ்திரேலியா அணியுடன் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற முக்கிய காரணம் கேஎல் ராகுல் எனவே கூறலாம் அதுவும் கடைசியில் அவர் சிக்ஸ் அடித்து போட்டியை முடித்த பின் அவரை சமூக வலைத்தளங்கள் அதிகம் பாராட்டி வந்தனர். இந்நிலையில் தான் கே எல் ராகுலை அணியை விட்டு நீக்க வேண்டும் என சர்ச்சை கருத்துக்களும் தற்போது பகிரப்பட்டு வருகின்றன. அவர் தொடக்க வீரராக இரண்டாவது வீரராக மூன்றாவது நான்காவது ஆறாம் பரிசு வரை எல்லா வரிசையிலும் விளையாடிய ஒரு வீரர் என்றால் அது கே எல் ராகுல் தான்.
அணியின் சூழலுக்கு ஏற்ப சிறப்பாக விளையாடி வருகிறார் கே எல் ராகுல். இந்நிலையில் அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று எழுந்த கருத்துக்கள் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது மேலும் அவர் இந்திய அணிக்கு ஒரு முதுகெலும்பு போல் உள்ளார். இவர் ஆறாவது வரிசையில் களமிறங்குகிறார் அணியின் சூழலில் விக்கெட்டுகள் விழுந்த போது ஆறாவது வீரராக இவர் இந்திய அணி தாங்கிப் பிடிக்கும் ஒரு தூணாக இருக்கிறார். இவர் விக்கெட் வீழ்ந்தால் அணியின் பேட்டிங் முடிந்து விடும் அதன் பின் ரன் குறையும். அந்த சூழ்நிலையில் சிறப்பாக விளையாடி வருகிறார் கே.எல். ராகுல் இறுதிப் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





