மாநிலத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சியாக நாம் தமிழர் இருந்தாலும் அதன் தலைவர் சீமான் மீது பல வித குற்றச்சாட்டுகள் சமீபத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் இவர் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்தால் அதனை தொடர்ந்து சீமான் இது பொய் குற்றச்சாட்டு என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் ஆனால் வழக்கானது விஜயலட்சுமிக்கு சாதகமாக தற்சமயம் அமைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு முன் அந்த நடிகையை எவ்வளவு கீழ்த்தரமாக தரமற்று பேச முடியுமோ அந்த அளவிற்கு சீமான் பேசி விடுகிறார். இதனால் சோசியல் மீடியாவில் சீமான் குறித்து அந்த நடிகை அவருக்கு நடந்த அநிதியை குறித்து பேசி வருகிறார் குறிப்பாக சீமானால் தொடர் ஏழுமுறை கருக்கலைப்பு செய்ததாகவும் இதனால் தற்பொழுது தனது கர்ப்பப்பையை மருத்துவர்கள் எடுக்க சொல்லி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்கொண்டு இவரது அக்கா படுத்த படுக்கையாக உடல் நடைபெற்று தனது தங்கையை சீமான் ஏமாற்றி விட்டார் என்று கூறிய வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அந்த நடிகை, நான் சீமானுடன் சமரசமாக வேண்டும் என்று நினைத்தால் எப்பொழுதே ஆகிருக்கலாம் ஆனால் சீமான் எப்படிப்பட்டவர் என்று தமிழக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் அதற்காகத்தான் இவ்வளவு தூரம் போராடுகிறேன். என்னிடமிருந்து வாங்கிய 50000 தான் மீண்டும் சீமான் எனக்கு கொடுத்தார்.
அதை பெரிய விஷயமாக கருதி சோசியல் மீடியாக்களில் தவறான கருத்தை சீமான் புகட்டுகிறார் என கண்ணீர் மல்க விஜய லட்சுமி பேசிய வீடியோ குறித்து மாற்று கட்சி சேர்ந்தவர்கள் சீமான் கொடுத்து பல வித விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.