Cricket: இந்தியனின் தலைமை பெயர்ச்சியாளர் கௌதம் கம்பீர் அணியில் இவர்தான் அண்டர்ரேட்டட் பிளேயர் என முதன்முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.
இந்திய அணி தற்போது 2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது. இந்திய அணி வீரர்கள் தற்போது இறுதிப் போட்டிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கௌதம் கம்பீர் இந்திய அணியிலேயே யார் அண்டர்ரேட் பிளேயர் என்பது குறித்து மனம் திறந்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து அவர் கூறுகையில் இந்திய அணியில் மிக முக்கிய அண்டர்ரேட்டட் பிளேயர் என்று யாரை கூறுவேன் என்றால் அது ஜடேஜா தான், அவர் மிகச்சிறந்த ஒரு வீரர் அவர் பேட்டிங் பவுலிங் பில்டிங் என எல்லா விதத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுள் அவர் முதன்மையானவர், ஐசிசிஎன் ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஜடேஜா தான் அவதான் உண்மையில் அண்டர்ரேட்டட் பிளேயர்.
அவர் விளையாடும் போது ரசிக்கிறோம் ஆனால் அவரைப் பற்றி வெளியில் பேசுவதில்லை அவர் அவர் திறமை பற்றி டிரெஸ்ஸிங் ரூமில் அவருக்கான உற்சாகம் மற்றும் கொண்டாட்டம் கிடைக்கிறது ஆனால் வெளியில் கிடைப்பதில்லை நாங்கள் அவருக்கு உரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களையும் டிரெஸ்ஸிங் ரூமில் கொடுக்கிறோம். அவர் டி20 ஓடியை டெஸ்ட் என மூன்று ஃபார்மட்டுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய வீரர்.
கடந்த போட்டியில் சுழற்சிளர்களில் குல்பி யாதவ் விக்கெட் வீழ்த்தவில்லை எனினும் ஜடேஜா சிறப்பான பவுலிங் செய்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுபோல முக்கியமான நேரங்களில் ஜடேஜா இந்திய அணிக்கு பெருதுணையாக இருக்கிறார் அது மட்டுமல்லாமல் நியூசிலாந்து அணிக்கு எதிராக அவருடைய ரெக்கார்ட் சிறப்பாக உள்ளது அதனால் இறுதி போட்டியில் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அவர் கூறியுள்ளார்.