கிரிக்கெட்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான போட்டி தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் ஒரே நோக்கத்துடன் முழு முயற்சி ஈடுபட்டுள்ளன அதுவும் குறிப்பாக சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளும் கடுமையான உத்வேகத்தில் இருக்கின்றன மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த நான்கு ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் இருக்கிறது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார் இதன் பிறகு தான் அணியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர் ஸ்லோ ஓவர்ரேட் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடன் விளையாட உள்ள முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியது. இந்த செய்தியை மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்நிலையில் இதைவிட பெரிய சோகச் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகபந்துவீச்சாளரான மும்முரா காயம் ஏற்பட்டு ஓய்வு பெற்று வருகிறார் தற்போது பும்ரா ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு வாரங்களில் வரும் எந்த போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் மார்ச் மாதத்தில் விளையாடும் போட்டிகளில் விளையாடாமல் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் அதுவும் முதல் வாரம் தாண்டி இரண்டாம் வாரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போட்டிகளில் விளையாடுவார் என தெரிய வருகிறது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.