தற்சமயங்களில் படங்களில் பெரிதும் ஆர்வம் காட்டாத தமன்னா வெப்சீரிஷியின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் தற்சமயம் அவர்களுக்கு ரசிகர் பட்டாளங்களும் அதிகரித்து வருகிறது. அதையும் கிளாமராவும் நடிப்பதாக தெரிகின்றது. வெப் சீரிஸ் ஏன் அதிக கவனம் செலுத்துகிறீர்கள்! என்று கேட்டதற்கு, அதில் சென்சார் பிரச்சனை இல்லை என்று ஓபனாக பதில் கூறியுள்ளார். மேலும் வெப் சீரிஸ்களில் கிளாமராக நடிக்க எந்த ஒரு தடையும் இல்லை. இதன் மூலம் அவருக்கு மிக டிமாண்டான மார்க்கெட் ஏற்படும்.
படங்களில் நடித்திருந்தால் படங்கள் சென்சார் பிரச்சினைக்கு ஆளாக்கப்பட்டு வெளி வருகிறது. இதனால் தன்னுடைய நடிப்பு திறமை வெளிவரவில்லை என்று அவர் கூறியுள்ளார். இவர் முன்பு நடித்து இருந்த தளபதியின் ஐம்பதாவது படமான சுறா படத்தின் நடித்துக் கொண்டிருக்கும் போது இந்த படம் பிளாஃப் தான் எனக்கு தெரியும் என்று சமீபத்தில் கூறியுள்ளார். அதில் என்னுடைய கேரக்டரும் பெரிதாக இல்லை.
நான் காமெடி நடிகை போல தான் வந்து இருப்பேன். ஆனாலும் வேறு வழியின்றி அப்படத்தில் நடித்திருந்தேன் என்று அவர் கூறியுள்ளார். இவர் இவ்வாறு சமீபத்தில் கூறியுள்ளது தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இவரது ரசிகர் பட்டாளங்களும் இவரது அடுத்த அடுத்த வெப் சீரிஸ்களை எதிர்பார்த்து வருகின்றனர். இப்படி பிசியாக இருக்க சமீபத்தில் சுறா படத்தை பற்றி இவர் இவ்வளவு ஓபன் ஆக தெரிவித்து இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.