இன்று கட்சி ஆரம்பித்தாலே ஆஹா ஓஹோ!! தவெக வை சூசகமாக பேசிய திருமாவளவன்!!

Thirumavalavan made a mockery of Tamil Nadu Victory Party

நேற்று சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து சூர்சகமாக பேசியுள்ளார் அதில் அவர் கூறுகையில், இன்று கட்சி ஆரம்பித்தாலே ஆஹா ஓஹோ என்று யூகங்களை எல்லாம் பெரிய பெரிய செய்திகளாக மாற்றுகிறார்கள் இப்போது 20 சதவீதம் 24 சதவீதம் என்றெல்லாம் எழுதுகிறார்கள் அடுத்த முதலமைச்சர் இவர்தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வழிந்து வழிந்து செய்தியை ஊதி பத்திரப்படுத்துகிறார்கள்.

இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது ஆனாலும் இந்த சமூகமும் இந்த ஊடகமும் எவ்வகை எத்தகைய அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இப்படிப்பட்ட இந்த சமூகத்தில் தான் அங்குலம் அங்குலமாக போராடி போராடி இன்றைக்கு இந்த அங்கீகாரத்தை நாம் பெற்று இருக்கிறோம் மற்றவன் எல்லாம் 100 மீட்டர் ஓடி பரிசு வாங்கி விடுவான் நாம் பத்தாயிரம் மீட்டர் ஓடினால் தான் அந்த பரிசு வாங்க முடியும்.

அப்படி ஒரு கேடுகெட்ட சமூகத்தில் நாம் களம் ஆடிக் கொண்டிருக்கிறோம் ஒரு கட்சியாக ஏற்காமல் அதை புறந்தள்ளுகிற ஒரு சமூகத்தில் நாம் இருக்கிறோம் நமக்கு பின்னர் எத்தனை கட்சி தோன்றினாலும் அந்த கட்சியை முன்னாள் எழுதி நம் கட்சியை பின்னால் எழுதுகிற உளவியல் கொண்டவர்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் எத்தனை பேர் அறிக்கை எழுதினாலும் நம்முடைய அறிக்கையை கடைசியாக போடு என்பதை ஒரு நிலையை விதியாக கொண்டிருக்கிற சமூகக் கட்டமைப்பில் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் அவர்களுக்கு கிடையாது சமூக மதிப்பீடுகள் அவ்வாறு இருக்கின்றன.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram