முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது பெரும்பாலானூர் மத்தியில் கவனத்தை திருப்பியது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மத்திய அரசு கூறிய தொகுதி வரையறை தான். இதனால் கேரளா தெலுங்கானா ஒடிசா மேற்குவங்கம் பஞ்சாப் ஆந்திரா என ஏழு மாநிலங்கள் பாதிப்பை சந்திக்கும். அதிக தொகுதிகள் கூடவோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பாஜக ஆதரவாளிக்காத மாநிலங்களுக்கும் இது ஒரு சிக்கல் நிலைதான். மேற்கொண்டு மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் தற்பொழுது வரை மத்திய அரசு எந்த ஒரு நிதியும் அளிப்பதில்லை.
இதையெல்லாம் எடுத்துரைக்கும் விதமாக நாளை நாடாளுமன்ற கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் எம்பி களுக்கு முதல்வர் அறிவுரை கூறியுள்ளார். அதாவது இந்த கூட்டத்தில் கட்டாயம் அனைத்து எம்பிகளும் கலந்து கொள்ள வேண்டும். நாம் கொடுக்கும் ஆதரவின் மூலம் மக்கள் நம்பிக்கை கொள்வர். அதேபோல இந்தி மொழியை தான் வேண்டாம் என்கிறோமே தவிர அந்த மக்களை அல்ல என்பதை எடுத்துரைக்க வேண்டும்.
அதேபோல நம் தமிழகத்தில் உள்ள எம்பி மற்றும் அமைச்சர் சேர்ந்து குழு அமைத்து நான் கடிதம் எழுதிய இதர மாநிலங்களுக்கு சென்று தொகுதி வரையறை பிரச்சனை குறித்து நேரடியாகவே எடுத்துரைக்க வேண்டும். இது முழுமையாக வெற்றி பெறும் வரை இதற்கான முயற்சியை கைவிடக்கூடாது. அதேபோல டெல்லியில் எம்பிக்கள் கூட்டம் நடத்த திமுக எம்பிக்கள் இதர கட்சியினரை அழைக்க வேண்டும். இதர கட்சி எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுவதால் பார்த்து செயல்படும்படி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல இருமொழிக் கொள்கை மூலம் நம் மக்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் தற்பொழுது எந்தெந்த துறைகளில் வெற்றி அடைந்து வருகிறார்கள் என்பது குறித்தும் அனைவருக்கும் உரைக்கும் படி கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.