ஜனநாயகன்”படத்தின் புதிய அப்டேட்!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

New update of the movie "jananayagan

Vijay: நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் படப்பிடிப்பு இறுதியாகும் என தகவல் வெளியாகி உள்ளது .

சமீபத்தில் வெளியான தி கோட் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். இந்தப் படம் சுமாராக 450 கோடி வசூல் சாதனை செய்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமான தளபதி 69 என்ற படம் வரவுள்ளது. இதுவே இவர் நடிக்கும் கடைசி படமாகும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ் கௌதம் வாசுதேவ மேனன் ,பூஜா ஹெக்டே ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தின் பெயர் ஜனநாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் படத்தை பிரபல இயக்குனர் எச் வினோத் இயக்க உள்ளார். படம் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்ட படமாகும். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தை வருகின்ற அக்டோபர் மாதம் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தில் வில்லனாக கங்குவா படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தளபதி 69என்ற பெயருடன் பட குழு வெளியிட்டது. இந்தப் படத்தில் பர்ஸ்ட் லுக் விஜய் ஒரு கேரவனில் இருந்து கை தூக்கும்படி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்டது என்று விமர்சிக்கப்படுகின்றனர். மேலும் அவரை சுற்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கும்படி அந்த ஃபர்ஸ்ட் லுக்கில் இடம் பெற்றுள்ளது. இவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக அரசியலில் களம் இறங்க உள்ளார்.

இதனால் இந்தப் படம் பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழு வேகத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்தம் படபிடிப்பும் மே மாதத்திற்குள் முழுமையாக நிறைவடைந்து விடும் என்று கூறுகின்றனர். மேலும் அடுத்த ஆண்டு 2026 தேர்தல் வருவதால் விஜய் அரசியலில் பிஸியாக இருக்கிறார்.

இதன் காரணத்தினால் ஜனநாயகன்படம் ஜூன் மாதம் இறுதிக்குள் முடிவடைந்து விடும். இந்தப் படம் 2026 தேர்தலுக்குள் திரைக்கு வரும் படியாக திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் ஜனவரி மாதம் தான் வெளிவரும் என்று பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தில் அப்டேட்கள் பின்வரும் நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram