உடலில் உஷ்ணம் அதிகமாவதால் நீர் இழப்பு ஏற்படுகிறது. உடலில் அதீத நீரிழிப்பு ஏற்படும் போது சர்க்கரை மட்டும் உப்பு கலந்த கரைச்சலை பருந்த வேண்டும். எலக்ட்ரால் அல்லது ஓ ஆர் எஸ் பவுடரை வெதுவெதுப்பான நீரில் கலந்து வேண்டும். வீட்டில் குளுக்கோஸ் பவுடர் இருந்தால் கலந்து குடிக்கலாம். தினமும் மூன்றிலிருந்து நான்கு லிட்டர் அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.
தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிப்பழம்,அண்ணாச்சி பழம், ஆரஞ்ச், இது போன்ற நீர் சத்துள்ள பழங்களை உண்ணுவது உடலுக்கு மிகவும் நல்லது. சுரைக்காய்,தக்காளி, வெள்ளரிக்காய்,பூசணிக்காய்,போன்ற தண்ணீர் நிறைந்த காய்கறிகளை உண்ணுவது நல்லது. இளநீர்,நுங்கு,மோர், தயிர்,எலுமிச்சை பழச்சாறு போன்ற குளிர்ச்சியான குளிர்பானங்களை குடிக்கலாம்.வெளியில் செல்லும் பொழுது தண்ணி கேனில் நெல்லிக்காய் ஜூஸ், அல்லது எலுமிச்சம் பழம் ஜூஸ் போட்டு வைத்துக்கொண்டு தேவைப்படும் பொழுது அருந்தலாம்.
நீர் ஆதாரம் உள்ள பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஒரு நாளில் இரு முறை குளிக்கலாம் இதனால் உடலில் உஷ்ணம் குறையும் இதனால் உடலில் வியர்வை வெளியாவது இதனால் உடலில் நீரிழப்பு ஏற்படாது. நீரிழிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படும் பொழுது எலக்ட்ரோலைட்களில் சமநிலை ஏற்படுகிறது.இதனால் மூச்சுத் திணறல், குழப்பம், சோர்வு, தசைப்பிடிப்பு,விரைவான இதயத்துடிப்பு, சில சமயங்களில் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம்.சமீபத்தில் நீர் இழப்பினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் தண்ணீரை அதிகமாக பருகுங்கள்





