போபால்: நேற்று நடந்த championship trophy இந்தியா நியூசிலாந்து இடையே இறுதி போட்டி நடைபெற்றது. இதில் அபாரமான ஆற்றத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாடு முழுவதும் இந்த வெற்றியை அமோகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடியதில் இரு பிரிவினருக்கிடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டது .இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மோவ் பகுதியில் நேற்று இந்திய வெற்றியை கொண்டாடிய சிலர் அப்பகுதியில் பேரணியாக சென்றனர். மேலும் அந்தப் பகுதியில் சிலர் மறைந்திருந்து பேரணி சென்றவர்கள் மீது கற்களை வீசி உள்ளனர். அதன்பின் இரு தரப்பினருக்கிடையே பயங்கரமான ம மோதல் ஏற்பட்டுள்ளது.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு வாகனங்களுக்கு தீட்டு கொளுத்தப்பட்டுள்ளது. பின்பு அங்கு இருந்த கடைகளுக்கும் தீவைக்கப்பட்டுள்ளனர். தகவலை அறிந்த போலீசார் அங்கு வந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் சமாளிக்க முடியாத காரணத்தினால் ராணுவ வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து இந்தூர் எஸ்.பி ஸ்த்திகா கூறுகையில் இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்ததால்இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பொழுது நிலைமை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வந்தப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் வளதலைகளில் வெளியாகும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறினார்.
மேலும் தொடர்ந்து இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவோம் என்று கூறினார். மேலும் இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடியதை ஏற்க முடியாமல் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.




