இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. கோலி எப்போது ஓய்வு!! மனம் திறந்த விராட்!!

Open-minded Virat

கிரிக்கெட்: இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி எப்போது ஓய்வு பெறுவேன் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 251 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக டேரியல் மிட்செல் 63 ரண்களும், பிரேஸ்வெல் 53 ரண்களும் அடித்து இருந்தனர்.

நிலையில் இரண்டாவதாக களமிறங்க இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அவ்வாறு வெற்றி பெற்று கோப்பை வென்றது. கோப்பையை வென்ற பின் பேசிய ரோஹித் சர்மா அவரது ஓய்வு குறித்து பேசினார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்தபின் ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என கூறி வந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரோகித் சர்மா. இதுகுறித்து அவர் கூறுகையில் நான் ஓய்வு பெறுவதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி அதை யாரும் நம்ப வேண்டாம் கடந்து செல்லுங்கள் என்று கூறினார்.

மேலும் ஓய்வு குறித்து விராட் கோலி கூறுகையில், இளம் வீரர்கள் போட்டியை முன்னோக்கி எடுத்துச் சென்று கோப்பையை வெல்ல முடியும் என்று தெரிந்த பிறகு நான் ஓய்வு பெறுவேன் என்று இந்திய அணியின் நட்சத்திர ஜாம்பவான் வீரர் விராட் கோலி கூறியுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram