இதை நீங்கள்தான் செய்திருக்க வேண்டும்!! பாகிஸ்தானை விளாசிய சோயப் அக்தர்!!

Shoaib Akhtar, who has made Pakistan proud

cricket;சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவிற்கு நீங்கள் பரிசளித்திருக்க வேண்டாமா? நீங்கள் செய்தது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு தன் நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அக்தர் அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டம் என்றது இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் அதிக முறை கோப்பை வென்ற அணி இந்தியா என்ற பெருமையை பெற்றது.

இந்த போட்டியை பாகிஸ்தான் நடத்தினாலும் சில பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடிய போட்டி மட்டும் துவையல் நடத்தப்பட்டது ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய அணி வீரர்களுக்கு ஐசிசி தலைவர் ஜெய்ஷா விருது மற்றும் கோப்பையை வழங்கி கௌரவித்தார் இந்திய அணி வீரர்களுக்கு பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோ விபத்தர் தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அந்த வீடியோவில் கடு மையான வார்த்தைகளையும் வேதனையையும் பகிர்ந்திருக்கிறார்.

இந்தியா வெற்றி பெற்று பரிசளிக்கும் விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை இது தனக்கு ஆச்சரியமாகவும் வினோதமாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொடரை நடத்தும் நீங்கள் ஏன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை சாம்பியன்ஸ் டிராபி என்பது உலக அளவிலான மேடை இந்த தொடரை நடத்தும் உங்களில் ஒருவராவது அந்த மேடையில் இருந்திருக்க வேண்டாமா? சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்தியாவுக்கு நீங்கள் பரிசளித்திருக்க வேண்டாமா? நீங்கள் செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று வேதனையாக பேசியுள்ளார். அதுமட்டுமின்றி இனிமேல் இப்படி ஒரு தவறை செய்யாதீர்கள். நீங்கள் செய்தது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைத்து சோயப் பக்தர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram