நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!!

டெல்லி: இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டம் எதற்காக நடைபெறுகிறது என்றால் தமிழக மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை

. இந்த தொகை சுமார் 2,152 கோடி ஆகும். இந்தத் தொகையை புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் இந்த தொகையை தமிழ்நாட்டிற்கு விடுவிக்க முடியும் இல்லை என்றால் இந்தத் தொகையை வேறு மாநிலத்திற்கு கொடுத்து விடுவோம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் கூறியுள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் மற்றும் இரண்டு கட்சிகள் இடையே மோதல் போக்கும் ஏற்பட்டுள்ளது. பின்பு தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நேற்றைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தமிழக முதலமைச்சரை சூப்பர் அமைச்சர் என்றும் அவர் தமிழக மக்களை நல்வழியில் கொண்டு போவார் என்றும் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மாணவர்களின் நலனை தமிழக திமுக அரசு கெடுக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். திமுக அரசு மாணவர்களை தமிழ் தவறான வழியில் கொண்டு செல்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த முன்மொழிக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்கான ஒதுக்கிய 21,52 கோடி ரூபாயை கொடுக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதன் காரணமாக இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழக மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram