பிரபல இயக்குனரின் சொத்து முடக்கம்!! இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்!! 

Chennai: தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் ஷங்கர் சங்கர் மீது அமலாக்கத் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். தமிழ் சினிமாவில்  தவிர்க்க முடியாத இயக்குனர் சங்கர் சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம்சரனின் கேம் சேஞ்சர் திரைப்படமும் பயங்கரமான தோல்வியை சந்தித்தது.

மேலும் எந்திரன் படத்தின் கதையின் காப்புரிமை தொடர்பாக இயக்குனர் சங்கர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். நிலையில் அவருடைய மூன்று இடங்களில் உள்ள சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கினர். மேலும் அந்த சொத்தின் மதிப்பு 10.11 ஆகும்.

மேலும் இதனை பற்றி இயக்குனர் சங்கர் கூறுகையில் அமலாக்கத்துறையின் சட்ட நடவடிக்கை அதிகார விதி மீறல்களை காட்டுகிறது. இந்த வழக்கை அமலாக்கத்துறை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் இந்த வழக்கை எதிர்த்து நான் ஹை கோர்ட்டில் மேல் முறையீடு செய்வேன் என்று கூறியிருந்தார்.

மேலும் இயக்குனர் சங்கர் கொடுத்த வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ் ரமேஷ் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் இயக்குனர் சங்கர் இடம் இருந்து முடக்கப்பட்ட 10 . 11 கோடி ரூபாய் சொத்தை முடக்கியதற்கு இடைக்கால தடையை விதித்தனர். மேலும் இந்த விசாரணை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் அமலாக்கத்துறை இந்த வழக்குக்கு சம்பந்தப்பட்ட பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிதிகள் உத்தரவிட்டனர்..

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram