இஸ்ரேல் பெண்ணுக்கு கர்நாடகாவில் நடந்த கொடூரம்!! நண்பனை நீரில் தள்ளி கொலை செய்த மர்ம நபர்கள்!!

Israeli woman brutally assaulted in Karnataka

கர்நாடகாவில் இருக்கக்கூடிய மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்று ஹம்பி. இந்த சுற்றுலா தளத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் இஸ்ரேலை சேர்ந்த இரண்டு பெண்களும் அவர்களுடன் மூன்று ஆண் நண்பர்களும் அதில் ஒருவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவராகவும் மொத்தம் ஐந்து பேராக சுற்றுலா தளத்திற்கு வந்துள்ளனர். இந்த சுற்றுலாவை மிகவும் மறக்க முடியாத ஒரு சுற்றுலா இருக்க வேண்டும் என்று நன்றாக ரசித்து சுற்றி பார்த்து வந்துள்ளனர்.

சுற்றுலா முடிந்த பின் இரவு அங்கேயே உணவு சமைத்து சாப்பிட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளும் செய்து விட்டு ஆடல் பாடலுடன் இரவில் மகிழ்ச்சியாக இருந்தபோது ஒரு பைக் ஒன்று அவர்கள் அருகில் வந்து நின்றது அதில் மூன்று பேர் வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பெட்ரோல் பங்கிற்கு வழி கேட்டுள்ளனர். இவர்களும் பெட்ரோல் பங்கிற்கு வழி கூறியுள்ளனர். ஆனாலும் அந்த நபர்கள் அங்கிருந்து போகாமல் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். நூறு ரூபாய் தரும்படி கேட்டுள்ளனர் ஆனால் இவர்களோ நூறு ரூபாய் தர முடியாது எனக்கூறி இருபது ரூபாய் கொடுத்து கிளம்புங்க என்று கூறியுள்ளனர்.

ஆனால் அந்த நபர்கள் அங்கிருந்து போகாமல் அந்த இரண்டு பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனை உடனிருந்த ஆண் நண்பர்கள் சண்டை போட தொடங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு வாய்க்கால் அருகில் இருந்துள்ளனர் அதனால் அந்த மூன்று நபர்களும் பைக்கில் இருந்து இறங்கி வந்து அந்த மூன்று நபர்களையும் வாய்க்காலில் தள்ளிவிட்டனர். அதன்பின் அந்த இரண்டு பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். கால்வாயில் தள்ளிவிட்ட மூன்று பேரில் ஒருவர் நீரில் மூழ்கி நிறைந்துள்ளார் அவர் உடலை தேடி வருகின்றனர் இருவர் உயிர் பிழைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் மூன்று நபர்களில் இரு நபர்களை காவல்துறை கைது செய்தனர் ஒருவர் தப்பியதன் காரணமாக தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகிறது காவல்துறை.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram