அட்டவணை பிக்சிங் செய்தது இந்தியா!! வெற்றியை தாங்க முடியாமல் கதறும் பாகிஸ்தான் ரசிகர்கள்!!

India fixed the schedule

Cricket: சாம்பியன்ஸ் டிராபித்தோட இந்திய அணி வென்ற பின் வெற்றியை தாங்க முடியாமல் பாகிஸ்தான அணியின் ரசிகர்கள் பலரும் கதறி வருகின்றனர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி நடைபெற்ற நிலையில் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. மேலும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான அணி லீக் போட்டியிலேயே அரை இறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபிக்ரை வென்ற இந்திய அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவும் அதனை கொண்டாடிவரும் நிலையில், இந்த வெற்றி தாங்க முடியாமல் பாகிஸ்தான் அணி ரசிகர்கள் பலரும் பலவிதமான குற்றங்களை சுமத்தி வருகின்றன. பதில் அவர்கள் கூறுகையில் இந்திய அணிக்கு ஏற்றவாறு ஐசிசி அவர்களுக்கு அட்டவணையை பிக்சிங் செய்து கொடுத்துள்ளது.

அது மட்டுமல்லாமல் ஐசிசி துபாயில் அவர்கள் சொந்த மைதானம் போல பிச்சை தயார் செய்து கொடுத்துள்ளது அதனால் தான் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு பெற்ற வெற்றியை இவர்கள் கொண்டாடவே கூடாது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்ல மறுத்து இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளையும் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டது இதன் காரணமாகவே பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த தொடரில் மூன்று போட்டிகள் மழையின் காரணமாக நின்றது பாகிஸ்தானை அணி கூட வராமல் வெளியேறியது இதுபோன்ற பல பின்னடைவுகள் இருப்பதன் காரணமாக ரசிகர்கள் ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தி வருகின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram