திருச்சி: திருச்சியில் உள்ள “பெல்” நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வந்த சண்முகம் என்பவர் திடீரென அவர் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த “பெல்”நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்தில் எஸ் எஸ் டி பி என்ற ஸ்டீல் டியூப் பிரிவில் மேலாளராக பணியாற்றி வந்தவர் சண்முகம் இவருக்கு வயது 50 ஆகும்.
இந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து வழக்கம் போல வேலைக்கு சென்ற சண்முகம் பணி முடிந்ததும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அலைபேசியில் அவரை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெல் நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் அவருடை அறைக்குச் சென்று பார்த்தபொழுது கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. பின்பு கதவைத் தட்டியும் அவர் பெயரை சொல்லி அழைத்ததற்கு உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.
உடனே அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது சண்முகம் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும் இது பற்றி திருச்சி போலீஸ் அதிகாரிகள் தகவலை தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குடும்பத்தினர் வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் விசாரணையில் அவர் தன்னுடைய துப்பாக்கியால் தன்னைத்தானே தலையில் சுட்டுக் கொண்டு இருந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது.
பின்புஅவரது உடலை கைப்பற்றி பிரரெத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் அவரது துப்பாக்கிக்கு முறையான உரிமம் இல்லாதது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த துப்பாக்கி அவருடையது தான என்பது விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இல்லை யாரேனும் அவரை சுட்டுவிட்டு கதவை பூட்டி விட்டு ஓடி விட்டனரா இன்று கோணத்தில் விசாரணை செய்து வருகின்றன. மேலும் மத்திய அரசின் தலைமையில் கீழ் இருக்கும் “பெல்” நிறுவனத்தில் இச்சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது