இந்த வருட நீட் தேர்வுக்கான விண்ணப்ப சமர்ப்பிப்பு காலம் முடிவடைந்துள்ளது. இது போன வருட எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது. பொதுவாக மருத்துவ துறை படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு நீட் நுழைவு தேர்வு இந்தியாவில் அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களுக்கு அப்ளை செய்ய கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்துள்ளது. அந்த வகையில் இந்த தேர்வுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் அப்ளை செய்து வருகிறார்கள்.
அதன்படி இந்த வருடம் 23 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. இது சென்ற வருடத்தை விட ஒரு லட்சம் குறைவான எண்ணிக்கையில் உள்ளது என்று கூறியிருந்தது. இதனால் கட் ஆஃப் குறைய வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டதற்கு அது மாணவர்களின் தேர்வு வினாத்தாள் மற்றும் எழுத்து சதவீதத்தை பொருத்து தான் முடிவெடுக்க முடியும் என்று தேர்வு முகமை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இதற்கு அப்ளை செய்த மாணவர்கள் தற்போது நடந்து கொண்டிருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நல்ல கட் ஆஃபுடன் கூடிய மதிப்பெண் எடுத்து இருத்தல் அவசியம். நீட் தேர்வானது வருகின்ற மே நான்காம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு தேர்வு முடித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்கள் அந்த தேர்விற்கு தயாராவார்கள் என்ற முனைப்போடு இந்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.