சமீப காலமாகவே மொபைல் ஃபோனுடன் பேட்டரியும் இன்பில்டாக வருகின்றது. எனவே, இந்த பேட்டரியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் மொபைல் போன் யூஸ் செய்ய கடினமாகிறது. இதனால் பலரும் பெரும்பாலும் செய்யக்கூடிய தவறுகளை ஸ்மார்ட் போன் வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர். யூசர்கள் மொபைல் போனை அடிக்கடி சார்ஜ் செய்து கொண்டே இருப்பார்கள். அது 80, 85% இருந்தாலும், சார்ஜ் செய்வார்கள்.
பொதுவாக நிபுணர்கள் இவ்வாறு செய்யவே கூடாது என்று வலியுறுத்துகிறார்கள். மொபைல் போனின் சார்ஜிங் அளவு 80% தாண்ட அவசியமற்றது. உங்களுடைய மொபைல் போன் சரிவர இயங்க வேண்டும் என்றால் அதன் அதிகபட்ச சார்ஜிங் லெவல் 80% ஆக இருக்க வேண்டும். அடிக்கடி சார்ஜ் செய்யக்கூடாது. முழுவதும் ட்ரையாகவும் விடக்கூடாது. மேலும் மொபைல் போன் சூடு ஆகாமல் இருக்க வேண்டும். மின்னழுத்தமும் சராசரியாக இருக்க வேண்டும். ஆப்ஸ்களின் அப்டேட்ஸ்கள் கூட மொபைல் போனை பாதிப்படையச் செய்யலாம்.
வெப்பமடையாமல் நம்மால் இயல்பாக கண்ட்ரோல் செய்ய இயலும். ஆனால், மின்னழுத்தத்தை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. 60% சார்ஜ் ஏறும் போது ஸ்பீடாக ஏறும். 100% நெருங்கும் போது மெதுவாக ஏறும். இது மின்னழுத்த மாற்றத்தால் ஏற்படக்கூடியது. இவ்வாறு மொபைலுக்கு 80% மட்டும் ஜார்ஜ் செய்தால் பேட்டரியை சரிவர பராமரிக்கலாம். பெரும்பாலும் அது பாதிப்படையாமல் பாதுகாக்கலாம் என்று வலியுறுத்துகின்றனர். நாளடைவில் பேட்டரிகள் பழுதாக தான் செய்யும். குறுகிய காலகட்டங்களில் பழுதாவதற்கு இந்த முறையை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.