இந்தியா அதிவேக வளர்ச்சி மிகுந்த நாடாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பெரும்பாலான கம்பெனிகள், வங்கிகள், வணிகம் மற்றும் வர்த்தகங்கள் ஆகியவை மூலகாரணங்களாக உள்ளன. மேலும் நடுத்தர வர்க்கத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரி விதிப்பு இந்த வருடம் தகர்க்கப்பட்டுள்ளதால் இதன் மூலம் நாம் நாடு மேலும் முன்னேற்றம் காணும் என்று மூடிஸ் ரேட்டிங்ஸ் நிறுவனத்தால் கணிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு இந்தியா பொருளாதார வளர்ச்சியில் அவ்வப்போது சற்று தொய்வு ஏற்பட்டிருந்தது. அதனை சரி செய்து மீண்டும் சென்ற வருடமே நல்ல முன்னேற்றத்திற்கு செல்ல முற்பட்டுள்ளது. அதன்படி கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருந்திருந்தது. இது இந்த வருடம் மேலும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்திய வங்கிகளின் சொத்து தரம் கணிசமாக உயர்ந்து வருகின்றது.
இது மேலும் நம் நாட்டை முன்னேற்ற, நம் நாட்டை அதிவேக வளர்ச்சி மிக்க நாடாக உருவெடுப்பதற்கு அடித்தளமாக அமைகின்றது. மேலும், தற்சமய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி விகிதத்தை கணிசமாக குறைத்துள்ளார். இதன் மூலம் மக்களின் வாழ்வியல் உயர ஏதுவாக அமையும். இந்தக் கணிப்புகளை வைத்து வரி உள்ளிட்ட அனைத்து செலவினத்தையும் கருதி 2025-26 ஆம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆனது (GDP) 6.5 சதவீதமாக வளர்ச்சி உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.