நடிகர் விஜய் சினிமா துறையில் இருந்து அரசியல் துறைக்கு காலடி எடுத்து வைத்திருந்தார். அவர் சென்ற வருடம் இந்த அறிவிப்பை அறிவித்ததில் இருந்து, கட்சி உறுப்பினர்கள் குறித்து பல்வேறு பிரச்சினை தொடர்ந்து எழுந்து வருகின்றது. இருப்பினும், அவர் ஒவ்வொரு பிரச்சனைகளையும் தூசு போல் தீர்த்துக் கொண்டு வருகிறார். அவர் நடத்திய முதல் மாநாடு எதிர்பாராத வரவேற்பை பெற்று இருந்தது. சினிமாவில் ஒரு நடிகர் என்பதைத் தாண்டி அரசியல் தலைவராகவும் மக்கள் இவரை ஏற்துக் கொண்டு உள்ளனர். அவரும் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அடுத்தடுத்து அரசியல் வாழ்க்கையில் தனது காலடியை மிக கவனமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரது கட்சியில் தமிழகம் முழுவதும் 120 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்வதாக தவெக முன்னரே திட்டம் தீட்டியிருந்தது. அதற்கு தகுந்தார் போல் 95 நபர்களை நியமித்தும் உள்ளது. இந்நிலையில், மீதமுள்ள செயலாளர்கள் நியமனத்தில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்திருந்தது. 25 பேர் நியமனத்தில், 19 பேர் நியமனம் மட்டுமே இன்று வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மீதமுள்ள ஆறு பேர் நியமனம் குறித்து பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக அதில் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய பெரிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இது கட்சிக்கு இப்பொழுது பெரும் குடைச்சலை கொடுத்து கொண்டு இருக்கிறது. இந்த பிரச்சனையும் அவர் சுமூகமாக தீர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.