கிரிக்கெட்: நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முக்கியமான ஆட்டநாயகன் இவர்தான் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கோப்பையை இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் இறுதி போட்டியில் மோதி வெற்றி பெற்றது. இதனால் மூன்றாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மகிழ்ச்சியாக கொண்டாடி வந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் தனது youtube பக்கத்தில் பேசிய அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் உண்மையான ஆட்டநாயகன் வருண் சக்கரவர்த்தி. அவர் விளையாடிய போட்டிகள் குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் ஆட்டத்தை மாற்றி அமைக்கும் சிறப்பான பந்துவீச்சினை அவர் வெளிப்படுத்தி உள்ளார். சொல்லப்போனால் அவர்தான் ஒவ்வொரு போட்டியின் வெற்றியை நிர்ணயித்ததில் அதிக பங்கு வகிக்கிறார்.
அவர் இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் மேட் ஹென்றி முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் வருண் சக்கரவர்த்தியும் உள்ளனர். அதனால் ஆட்டநாயகன் விருது வழங்கவில்லை என்றாலும் உண்மையான ஆட்டநாயகன் வருண் சக்கரவர்த்தி தான் எனக் கூறியுள்ளார்.





