கே எல் ராகுல் இந்திய அணிக்கு Mr. Fixit!! ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் புகழாரம்!!

KL Rahul to join Indian team as Mr. Fixit

கிரிக்கெட்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே எல் ராகுல் குறித்து மனம் திறந்த ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்.

இந்திய அணி நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்தக் கோப்பை இந்திய அணி வெல்வதற்கு இந்திய அணியின் அனைத்து வீரர்களும் முக்கிய பங்காற்றினர். அனைவருமே அவர்களின் ஆட்டத்தை சிறந்த முறையில் வெளிப்படுத்தியதால் தான் இந்த கோப்பை வெல்ல முடிந்தது. ஆனாலும் இந்த அணியில் வெளியில் ரசிகர்களால் பாராட்ட படாத வீரர்கள் என்றால் அது ஸ்ரேயர்ஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் இருவரும் தான்.

மேலும் கே எல் ராகுல் ஆரம்பத்தில் தொடக்க வீரராக களம் இறங்கி மூன்றாவது வீரர் நான்காவது வீரர் ஐந்தாவது ஆறாவது என அனைத்து வரிசையிலும் களமிறங்கி அந்த இடத்திற்கு தகுந்தார் போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கே எல் ராகுல் சிறப்பான முறையில் விளையாடி கோப்பை வென்று கொடுத்தார் எனவே கூறலாம். போட்டியில் அவரது ரோல் முக்கியமானது. அதாவது முக்கிய வீரர்கள் ஆட்டம் இழந்த பின் கடைசியாக அணியை பேட்டிங் செய்து வெற்றிக்கு கொண்டு செல்ல வேண்டிய ஒரு வீரர்.

இது குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறுகையில் கே எல் ராகுல் ஒரு சிறந்த துவக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார். விக்கெட் கீப்பிங் பில்டிங் செய்கிறார் மிடில் ஆர்டர் ஆறாவது இடத்திலும் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். அவர் இந்திய அணிக்கு Mr. Fixit போன்றவர். தற்போது அவருடன் இணைந்து டெல்லியில் விளையாட ஆவலாக காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram