பாலிடெக்னிக் முடித்த நீண்ட காலம் ஆகியும் தங்களுடைய அரியர் பேப்பர்களை கிளியர் செய்யாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வின் மூலம் அவர்களுடைய அரியர்களை கிளியர் செய்வதற்கான வழி வகையை உருவாக்கி இருக்கிறது உயர்கல்வித்துறை.
உயர்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :-
உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு முடித்த மாணவர்கள் மற்றும் தங்களுடைய அரியர் பேப்பர்களை நிலுவையில் வைத்திருக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 ஆகிய இரண்டு மாதங்களில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் சிறப்பு தேர்வுகளில் கலந்துகொண்டு பாலிடெக்னிக் மாணவர்கள் தங்களுடைய அரியர் பேப்பர்களை கிளியர் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஆன மு க ஸ்டாலின் அவர்களும் மாணவர்களின் உடைய வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அதன்படி தான் உயர் கல்வித் துறையில் இந்த முடிவானது தற்பொழுது எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கக்கூடிய அரியர்களை பாலிடெக்னிக் மாணவர்கள் கிளியர் செய்வதற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்றும் அதனை தொடர்ந்து அவர்கள் தங்களுடைய வாழ்வில் அடுத்த கட்டங்களை நோக்கி செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மாணவர்கள் கூட கல்வியை பயின்று அதற்கு தகுந்த வேலையில் பணியாற்ற வேண்டும் என்றும் அனைவருக்கும் நல்ல கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைத்தால் வேண்டும் என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பாடுபட்டு வருவதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பாலிடெக்னிக்கல் தங்களுடைய குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக அரியர் பேப்பர்களை கிளியர் செய்ய முடியாமல் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் பல மாணவர்கள் மூன்று ஆண்டுகளை முடித்த பின்பும் தங்களுடைய அரியர் பேப்பர்களை கிளியர் செய்யாததால் தங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியவில்லை என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தருவது முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.