இன்றைய காலகட்டத்தில் ஹெட் போன் மற்றும் இயர் போன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவை யூஸ் செய்வதனால், காதுகள் கேட்கும் திறனை இழக்கும் என்று எச்சரிக்கின்றனர் பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை. பாதிப்படையாமல் யூஸ் செய்வதற்கான வழிமுறைகளையும் கூறியுள்ளனர். அதனைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். இதற்கு சாலச் சிறந்த பழமொழி அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு! என்பதே. பாட்டு கேட்பதினால், ஒருவரின் மனபாரதம் குறையும் என்பதற்காக பலரும் அதிக சவுண்ட் எபெக்ட் உடன், அதிக நேரம் ஹெட் செட் உபயோகித்து வருகின்றனர்.
இதனால் காது தனது நிலையை இழந்து மந்த நிலைக்கு தள்ளப்படுகின்றது. முதலில் சிறிய அதிர்வுகளை உணர முடியாத படியும், நாளடைவில் காது கேட்கும் திறனை இழப்பது ஆகியவையும் நிகழும் என்று எச்சரிக்கின்றனர். இதை தவிர்க்க வேண்டும் என்றால், ஹெட்செட் உபயோகிக்கும் நேரத்தை ஒரு நாளைக்கு மேக்ஸிமமாக 2 மணி நேரம் தான் பயனர்கள் பயன்படுத்த வேண்டும். அதுவும் மிதமான சவுண்டில் பயன்படுத்தி வருவது நல்லது. காது வலி ஏற்படும் எனில், உடனடியாக அதை உபயோகிக்க நிறுத்துவது நல்லது. முடிந்த அளவு தேவை இன்றி காதுகளினுள் ஹெட்செட் பயன்படுத்துவதை நிறுத்துவதே சாலச் சிறந்தது என்று எடுத்துரைக்கிறது மருத்துவ குழு. பொதுவாக வெளியில் இருக்கும் போது, டிரைவிங் செய்யும் போது அவசர அழைப்பு ஏற்பட்டால் அதை தொடர்வதற்காக தான் ஹெட்செட் உருவாக்கப்பட்டது. பாடல்கள் கேட்க வேண்டும் என்றால் ஹோம் தியேட்டர் போன்ற சாதனங்களை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறது.