இயக்குனர், குணச்சித்திர நடிகர் மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகர் மாரிமுத்து அவர்கள் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக பணியாற்றிய பொழுது நடந்தவை மற்றும் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஆகிய இருவருடனும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து குறித்து நடிகர் மாரிமுத்து தெரிவித்திருப்பதாவது :-
ஒருவர் ஒரு கவிஞரோடு பழகுகிறார் என்றால் அவரும் கவிஞராக இருக்க வேண்டுமே தவிர இயக்குனராகவோ அல்லது தயாரிப்பாளராகவோ இருந்து விடுவது மிகவும் கடினமான ஒன்று என தெரிவித்தவர் அப்படிப்பட்ட கவிஞரை வைரமுத்து அவர்கள் மடியில் வைத்து உணவு ஊட்டுவார் என்றும் அதே நேரத்தில் திடீரென கீழே தள்ளி உதைத்து விடுவார் என்றும் அவருடைய குணநலன் பற்றி விவரித்திருக்கிறார் நடிகர் மாரிமுத்து.
பொதுவாக இவர் இசையுலகில் போராடி மட்டுமே வென்றதாகவும் ஏ ஆர் ரகுமான் வந்த பின்பு இவருடைய வாய்ப்புகள் குறைய தொடங்கியது என்றும் தெரிவித்ததோடு கடலோர கவிதைகள் தான் இளையராஜாவுடன் இவர் இணைந்து பணியாற்றிய கடைசி படம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
பிரபல வார இதழில் ” இந்த குளத்தில் கல் எரிந்தவர் ” தலைப்பில் தொடரை எழுத துவங்கிய வைரமுத்து அவர்கள் அதில் முதலில் இளையராஜாவின் பெயர்தான் இடம்பெற வேண்டும் என தெரிவித்திருக்கிறார். அதன் பின் சிவாஜி கணேசன் குறித்தும் அத தொடரில் எழுதியதோடு 15ஆவது பக்கத்தில் இளையராஜாவை குறித்து எழுத நினைத்த பொழுது அவர் ,” 15 வருடங்களாக தமிழகத்தின் காற்று உன் குத்தகையில் இருக்கிறது ” என எழுதியவுடன் எங்கிருந்தோ அவருக்கு நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி என்ற பாடல் ஒலித்ததாக தெரிவித்திருக்கிறார். அதன்பின் அந்தத் தொடரை தூக்கி எறிந்து விட்டு நடுக்கத்துடன் எனக்கு எதிரி என்றால் அது இளையராஜா மட்டுமே எனக் கூறியதாகவும் நடிகர் மாரிமுத்து தெரிவித்திருக்கிறார்.