கடந்த ஜூன் 5ஆம் தேதி வெறும் 8 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்று இருந்த சுனிதா வில்லியம்ஸ் ஸ்டார் லைனர் விண்கலம் பழுது அடைந்தது காரணமாக கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு விண்கலத்திலேயே தங்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு இருந்தனர். சமீபத்தில் அனுப்பப்பட்ட எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூவ் டிராகன் அவர்களை அழைத்து வருவதில் முதலில் தடுமாற்றம் கண்டிருந்தாலும், பின்னர் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டு இருந்தது. விண்வெளி சூழலை பொறுத்து அவர்கள் மீண்டும் வருவதற்கான நேரம் அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்சமயம் நான்கு பேர் கொண்ட குழுவோடு சென்ற க்ரூவ் டிராகன் விண்வெளி மையத்தை அடைந்துள்ளது. அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் குறைந்த புவி ஈர்ப்பு விசையில் அவர்கள் அங்கு ஒன்பது மாதம் காலமாக இருந்து வரும் நிலையில், அவர்கள் பூமிக்கு திரும்பும் போது அவர்களால் சாதாரண வேலை கூட மிகக் கடினமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். உதாரணத்திற்கு பென்சிலை தூக்குவதற்கு கூட அவர்கள் உடல் ஒத்துழைக்காது. மேலும் அவர்கள் பூமியை இந்த குறிப்பிட்ட நாட்களில் கிட்டத்தட்ட 6000 தடவை சுற்றி வந்து இருப்பார்கள். அவர்களின் உடல்நிலை உடலில் உள்ள உள் உறுப்புகள் ஆகியவற்றின் திறன் எதிர்பாக்காத அளவு குறைந்திருக்கும். அவர்கள் பூமிக்கு வந்து நடப்பதே அவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புவதற்கு இன்னும் ஒரு வருட காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. அவர்களின் கண்பார்வை முதல் எடை இழப்பு, நரம்பு மற்றும் எலும்பு ஆகியவையும் பயங்கர சோர்வடைந்து இருக்கும். இதற்கு மேல் பூமிக்கு வந்த பிறகு அதிகபட்சமாக அவர்களின் செல்களின் புதுப்பிப்பு ஏற்படுவதற்கு கரெக்டாக இல்லை என்றால் அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது என்று கணித்துள்ளனர். இதற்கு முன்னர் வலேரி பலியாகோவ் என்ற ரஷ்ய வீரர் அதிகபட்சமாக விண்வெளி மையத்தில் 437 நாட்கள் தங்கியுள்ளார். அவரைப்போல சிலர் ஒரு வருடத்திற்கு மேல் விண்வெளியில் தங்கி உள்ளனர். இருப்பினும் மேற்கூறப்பட்டது போல் அவர்கள் உடம்பின் நிலை பூமிக்கு வந்த பிறகு மிக சவாலாக அமையும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.