சென்னை நிலவரப்படி தங்க விலை ஆனது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வருடம் முடிவிற்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 10 ஆயிரமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதனால் மக்கள் பலரும் இதை வாங்கும் எண்ணத்தையே கைவிட்டு விட்டு உள்ளனர். மேலும் முன்னர் செய்திருந்த மொய் தங்கத்தை திரும்பி செய்ய மக்கள் தற்சமயம் திண்டாடி வருகின்றனர். பலரும் தங்கம் மொய் வேண்டாம் என்று புறக்கணித்தும் வருகின்றனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 8956. இதன் நேற்றைய விலை ரூபாய் 8967. கிட்டத்தட்ட 11 ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் விலை ரூபாய் 71,648. இதன் நேற்றைய விலை ரூபாய் 71,736. 88 ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது.
22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 8,210. இதன் நேற்றைய விலை ரூபாய் 8,220. நேற்றைய விலையை விட பத்து ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் விலை ரூபாயை 65,680. இந்த நேற்றைய விலை ரூபாய் 65,760. 80 ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. வெள்ளியானது மிகத் துல்லிய வேறுபாட்டில், இன்று விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை 112 ரூபாய். இன்று 10 பைசா குறைந்து ரூபாய் 111.90க்கு விற்கப்படுகிறது. கிலோவிற்கு நேற்றைய விலையை விட ரூபாய் 100 குறைவாக விற்கப்படுகிறது.