தமிழ் சினிமா துறையில் முதல் முறையாக கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு துணையாக களமிறங்கியவர் நடிகை லைலா. சரி பால் அனைவரையும் கட்டி போட்ட இவர் இவருடைய சினிமா காலகட்டத்தில் பல கிசுகிசுக்களை கடந்திருக்கிறார்.
எனினும் தான் காதலித்த ஈரான் நாட்டு காதலனையே 2006 ஆம் ஆண்டு மணமுடித்து அதன் பின் சினிமா துறையில் இருந்து ஓய்வெடுத்தவர் மீண்டும் கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தோன்றி ரசிகர்களை எல்லை இல்லா மகிழ்ச்சி ஆழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் அவர்களின் Goat திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-
நடிகை லைலா அவர்கள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்கக்கூடிய சுபாவம் கொண்டவர் என்றும் பிதாமகன் படப்பிடிப்பு தளத்தில் லைலாவை கவனித்த விக்ரம் அவர்கள் ஒரு 30 நிமிடங்கள் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியுமா எனக் கேட்டதற்கு தன்னால் முடியும் என தன்னுடைய சிரிப்பை அடக்கி நார்மலாக இருக்க முயற்சி செய்திருக்கிறார் நடிகை லைலா.
ஆனால் சிரிப்பை அடக்க முயன்ற பொழுதிலிருந்து அவருடைய கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்திருக்கிறது. இதனைக் கண்டு நடிகர் விக்ரம் அவர்களும் அதிர்ச்சி கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வுக்கு பின்பு தான் நடிகை லைலா அவர்களுக்கு சிரிப்பு நோய் இருக்கிறது என்று இதனை அடக்க நினைத்தால் அவரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கண்களில் நீர் வலியும் என்றும் அனைவருக்கும் புரிந்து இருக்கிறது.
மேலும், இந்த சிரிப்பு நோயானது உணர்வுகளை கட்டுப்படுத்தக் கூடிய நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளால் வரக்கூடியது என்றும் பக்கவாதம், அல்சீமர், பார்கின்சன்ஸ், மூளையில் காயம் போன்ற நோயிருக்கக் கூடியவர்களுக்கே இந்த சிரிப்பு நோயானது தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் மருத்துவ தரப்பில் இருந்து தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.