சமீபத்தில் அமலாக்கத்துறை தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகளில் சோதனை நடத்தியுள்ளது. அதில், டாஸ்மாக் நடத்துவது குறித்த ஏலம், இடமாற்றம் வாகனங்கள் டெண்டர் ஒதுக்கீடு மற்றும் மதுபானங்களின் விலை பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் கூட வைத்து விற்பது ஆகிய காரணங்களின் அடிப்படையில் தற்போதைய திமுக அரசு ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது என்று வெளியிட்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதனை வன்முறையாக கண்டித்து போராட்டம் நடத்த முற்பட்டுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறுகையில், தொடை நடுங்கி திமுக அரசு ஊழலுக்கு காரணமானவர்களை வீட்டுச் சிறையில் பதுக்கி உள்ளது.
முற்றுகையிடும் தேதியை முன்னரே அறிவித்திருந்ததால் அவர்கள் ஒளிந்து கொண்டுள்ளனர். போராட்டத் தேதியை அறிவிக்காமல் நாங்கள் முற்றுகை இட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்த ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி முதல்வர் மு க ஸ்டாலின். இரண்டாவது குற்றவாளி செந்தில் பாலாஜி என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் வீட்டையே முற்றுகையிடுவோம் என்று கூறியுள்ளார். அவர், வானதி மற்றும் தமிழிசை ஆகியோர் முற்றுகை இடுவதாக கூறியதனால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கு அண்ணாமலை, நாங்கள் எதிர்த்து கேள்வி கேட்பதனால் அதற்கு உங்களால் பதில் கூற முடியாத காரணத்தினால், சிறையில் அடைக்கப்படுகிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார். தமிழகம், டெல்லியை விட மோசமாக மாறி வருகின்றது. நாங்கள் அதை காக்க தொடர்ந்து முயற்சிக்கிறோம் என்றும் எடுத்து உரைத்துள்ளார். இவர் கைது செய்யப்பட்டதை ஒட்டி, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.