வெளிநாட்டிற்கு படிப்பிற்காகவோ, சுற்றி பார்க்கவோ, ஆராய்ச்சிக்காகவோ அல்லது வேலை பார்ப்பதற்காகவோ எதற்காக செல்ல வேண்டுமென்றாலும், பாஸ்போர்ட் என்பது ஒரு அடிப்படை ஆவணம். இந்த அடிப்படை ஆவணத்தில் பலதரப்படுத்த தகவல்களை சேர்க்கும் முன்னர் அது குறித்த உரிய ஆவணத்துடன் தான் பதிவு செய்ய முடியும். அதிலும் குறிப்பாக தற்சமயம் பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரி சான்று மேலும் குறிப்பிட்ட ஆவணங்கள் இதற்கு முக்கியமாக தேவை.
கஸ்டமர்களின் முகவரியானது பாஸ்போர்ட்டின் இறுதி பக்கத்தில் அச்சிடுவது தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்குப்பதிலாக பாஸ்கோட் மூலம் தகவல் பதிவிடப்பட உள்ளது. இதன் மூலம் தனிநபரின் தகவல் சிதறாமல் இருக்கும் என்று முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்களின் பெயர் நீக்கப்பட உள்ளது. பாஸ்போர்ட் சேவை மையங்களில் எண்ணிக்கையானது உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தேவை அதிகரிக்கப்பட்டதால் இது உயிர்த்த பட உள்ளது. அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிற வண்ணக்குறி பாஸ்போர்ட்டும், சாதாரண மக்களுக்கு நீல நிற பாஸ்போர்ட்டும், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் பதிவிற்காக அருகில் உள்ள இ சேவை மையத்தை அணுகலாம். அல்லது பாஸ்போர்ட் சேவா கேந்திரா, அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை கேந்திரா அலுவலகத்தையும் அணுகலாம். அங்கு பதியப்படும் விண்ணப்பத்தில் தேவைப்படும் ஆவணங்களை சரியாக உள்ளிட வேண்டும். தேவையான சான்றுகளுடன் நேர்காணல் நடைபெற்ற பின்னர் போலீஸாரால் சரிபார்ப்பு நடைபெறும். பின்னர் தான் பாஸ்போர்ட் வழங்கப்படும்.