2026 ஆம் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றி கழகத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இரண்டாவது ஆண்டில் மாவட்ட செயலாளர்களை நிர்ணயத்தை தங்களுடைய கட்சி கோட்பாடுகள் கொள்கைகள் என அனைத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
மேலும் ஒருபுறம் தன்னுடைய கடைசி திரைப்படமான ஜனநாயகம் திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டே மறுபுறம் தன்னுடைய அரசியல் பயணத்தையும் பார்வையிட்ட வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக வெற்றி கழகத்திலிருந்து ஆதவ் அர்ஜுனா அவர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக பரப்பப்பட்டு வரும் தகவல் குறித்து அந்த கட்சி தரப்பில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்டதை யாரோ எடிட் செய்து தமிழக வெற்றிக்கழகத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதாக வதந்திகளை பரப்பி வருவதாகவும் உண்மையில் இது போன்ற எந்த முடிவுகளையும் தமிழக வெற்றிக் கழகமானது எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ஆதவ் அர்ஜுனா அவர்கள் வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்னும் அரசியல் வியூக வகுப்பு நிறுவனத்தை நடத்தி வரக்கூடிய ஆதவ் அர்ஜுனா அவர்கள் தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து இந்த கட்சிக்கான வளர்ச்சி பணியை முன்னெடுத்து நடத்தி வருவதாகவும் த வெ க சார்பாக நடத்தப்படக்கூடிய பொதுக்குழு கூட்டத்தை முன்னெடுத்து நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் தற்பொழுது ஆதவ் அர்ஜுனா அவர்கள்தான் தன்னுடைய தலைமையில் பொறுப்பேற்று நடத்தி வருவதாகவும் த வெ க கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.