கடந்த மாதம் மார்ச் 6 ஆம் தேதி தமிழகத்தில் 1000 கோடி ரூபாய் டாஸ்மார்க் ஊழல் நடைபெற்றது என்ற வெளியான தகவலை தொடர்ந்த அனைத்து டாஸ்மார்க் கடைகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் உள்ள டாஸ்மார்க் மற்றும் அதற்கு சொந்தமான அலுவலகங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
டாஸ்மார்க் நிறுவனங்களில் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக பணம் வசூலிப்பதில் தொடங்கி மதுபானங்கள் இடமாற்றம் தொடர்பான பதிவுகள், போக்குவரத்து டெண்டர், பார் உரிம டெண்டர், சில மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமாக ஆர்டர்கள் என அனைத்தையும் அமலாக்கத்துறை அலசி ஆராய்ந்து இருக்கிறது. அதன் பின்பு தான் தமிழகத்தில் டாஸ்மார்க் ஊழல் செய்யப்பட்டு 1000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடை பெற்று இருப்பதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அரசியலில் ஒரு பூகம்பமே கிளம்பியது. அந்த தருணத்தில் தான் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய பினாமியின் பெயரில் SNJ மதுபான நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறார் என்றும் அதிலிருந்து தான் டாஸ்மார்க் நிறுவனங்களுக்கு 90% மதுபானங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுதன. இதனை கண்டித்து நேற்று பாஜக தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.
பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாகவே இன்று சென்னை தலைமை செயலகத்தை சுற்றி தீவிர வாகன தணிக்கையில் காவல்துறை ஈடுபட்டிருக்கிறது. இன்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருப்பதற்காகவும் இதுபோன்று தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.