டிஜிட்டல் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களால் இந்தியாவிற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாகவும் உலக அளவில் இந்தியாவின் பொருளாதார உயர்வதற்கு டிஜிட்டல் மற்றும் கண்டன் கிரியேட்டர்கள் மிகப்பெரிய மூலதனமாக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
உலகில் அதி வேகமாக வளர்ந்து வரக்கூடிய அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளைப் போலவே இந்தியாவும் டிஜிட்டல் கன்டென்ட்டில் மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் தற்பொழுது இந்தியாவில் இருக்கக்கூடிய அதிக அளவு இளைஞர்கள் இந்த தளத்தை தேர்வு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்கள் நேரடியாக மக்களுடன் கனெக்ட் ஆகி இருப்பதாலும் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களையும் நோக்கங்களையும் நேரடியாக மக்களிடம் சேர்ப்பதற்கு இது போன்ற டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களை பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் கிரியேட்டர் எக்கனாமிக்காக 1 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி இருக்கிறார்.WAVES எனப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக ஆடியோ-விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இந்த காலகட்டத்தில் கன்டென்ட் கிரியேட்டர் மற்றும் டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர் போன்ற துறைகள் பொழுதுபோக்காக மட்டுமல்லாது அதிக பணப்புழக்கம் இருக்கக்கூடிய தளமாகவும் மாறி இருக்கிறது. இதற்கென தனி ஒரு படிப்பை உருவாக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் அந்த பட்டப் படிப்பு பிரிவுகளானது IITs மற்றும் IIMs போன்றவற்றை மாடலாகக் கொண்டு இந்தியா கிரியேட்டர் தொழில்நுட்ப நிறுவனம் IICT என நிறுவ இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவினுடைய டிஜிட்டல் எதிர்காலத்தை முன்னேற்றுவதில் யூ டியூபர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் இவர்கள் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் சாதாரண மக்கள் இருவருக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பலருக்கு பல சந்தேகங்கள் இருந்திருக்கலாம் அதாவது youtube அவர்கள் எவ்வாறு சம்பாதிக்கிறார்கள் எப்படி இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்று, அதற்கான ஒரு முக்கிய மற்றும் குறுகிய விளக்கத்தை இதன் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.