தமிழகம் முழுவதும் பல லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழக அரசின் உதவித்தொகையை பெறக்கூடியவர்களுக்கு மகளிர் உதவித்தொகை வழங்கப்படாது என்றும் அவர்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கும் மகளிர் உரிமை தொகையானது வழங்கப்படாமல் இருந்திருக்கிறது. இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருப்பதாவது :-
தற்பொழுது தமிழகத்தில் மனநலம் குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் மாதம் 1500 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை தரக்கூடியவர்களுக்கு மகளிர் உரிமை தொகை பெறுவதில் சிக்கல்கள் நீடித்து வருகிறது. இது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் தெரிவிக்கும் பொழுது இனி மனநிலை குன்றிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி பெற்றோர்களுக்கு கட்டாயமாக மகளிர் உரிமை தொகையானது வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
தற்பொழுது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மகளிர் உரிமை தொகை பெறுவதில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு இருப்பதாகவும் அதில் உள்ள தளர்வுகளின் படி தமிழக அரசிடம் இருந்து உதவித்தொகை பெறுகிற ஒரு சில குடும்பங்களுக்கு மகளிர் தொகை வழங்குவதில் எந்த வித சிக்கல்களும் இல்லை என்றும் அதன்படி தான் மாற்றுத்திறனாளி மற்றும் மனநிலை குன்றிய குழந்தைகளின் உடைய பெற்றோர்களும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து இனிவரும் காலங்களில் மகளிர் உரிமை தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.