கிரிக்கெட் : ஐபிஎல் 2025 மார்ச் 22 தொடங்க உள்ள நிலையில் கொல்கத்தா அணியில் முக்கிய வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் ஆனது வருகிற மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கு முன் சிஎஸ்கே அணி 5 கோப்பைகளும் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து கோப்பைகளும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த இரண்டு அணிகளில் எந்த அணி ஆறாவது கோப்பையை வெல்லப் போகிறது என இரு அணி ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு கோப்பை வென்ற கொல்கத்தா அணி ஒரு பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கோப்பை வென்று கொடுத்த ஸ்ரீ எஸ் ஐயரை கொல்கத்தா அணி இந்த முறை தக்க வைக்கவில்லை. கொல்கத்தா அணியின் தற்போதைய கேப்டனாக ரகானே அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் கொல்கத்தா அணியில் அதிக விலைக்கு வெங்கடேஷ் ஐயர் வாங்கப்பட்டார்.
அது மட்டுமல்லாமல் கொல்கத்தா அணி உம்ரான் மாலிக் கை இந்த முறை ஏலத்தில் வாங்கி இருந்தது. அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால் அவருக்கு பதிலாக சேத்தன் சக்காரியா அணியில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது கொல்கத்தா அணி நிர்வாகம்.





