ஆரம்பித்தது வாடிவாசல் திரைப்படப் பணிகள்!! ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!!

Vaadivasal film work begins

சினிமா : சூர்யா நடிக்கும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் பாடல் ரெக்கார்டிங் பணிகள் தற்போது தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் முன்னணி நடிகர்களுள் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் தான் சூர்யா. இவர் அதிகம் பாராட்டப்படாத நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். ஏனெனில் இவருக்கு சமீப காலமாக சிறப்பான திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. வெளியான திரைப்படங்கள் வெற்றி அடையாமல் தோல்வியில் முடிந்துள்ளது. சூர்யாவுக்கு கடைசியாக வெளியான திரைப்படம் கங்குவா.

இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளர் 2000 கோடி இந்த திரைப்படம் வசூல் செய்யும் என கூறிய நிலையில் அது பெரிய ட்ரோல் வீடியோவாக மாற்றப்பட்டது. அதன்பின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் போன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து அளவிற்கு கங்குவா திரைப்படம் வெற்றி அடையவில்லை. தோல்வியில் தான் முடிந்துள்ளது அதனால் அடுத்து வெளியாகும் சூர்யா திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது குறைவாக தான் உள்ளது.

ரசிகர்கள் பலரும் அடுத்த திரைப்படத்தில் நிச்சயம் சூர்யா கம்பர் கொடுப்பார் என எதிர்பார்த்து வருகின்றனர். அடுத்தபடியாக சூர்யாவுக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தின் பாடல் ரெக்கார்டிங் பணிகள் தொடங்கியுள்ளதாக பதிவை வெளியிட்டுள்ளார். எனவே ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram