கொல்கத்தா vs லக்னோ போட்டியில் மாற்றம்!! காரணம் என்ன??

Kolkata vs Lucknow match change

Cricket : வருகிற 22 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து போட்டிகளில் லக்னோ மற்றும் கொல்கத்தா இராணிகளும் மோத இருந்த போட்டி தற்போது மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் கிரிக்கெட் ஸ்கோர் அனைவரும் ஐபிஎல் தொடர் இப்போது ஆரம்பிக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அதுவும் குறிப்பாக மும்பை மற்றும் சென்னை இரு அணிகளும் மோதும் போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இன்று சென்னை மற்றும் மும்பை இடையிலான போட்டிக்கு விற்பனை தொடங்கிய சற்று நேரத்திலே அனைத்து விக்கெட்களும் விற்று தீர்ந்தது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 6-ம் தேதி கொல்கத்தா மற்றும் லக்னோ இடையிலான போட்டி நடைபெற உள்ளது இந்த போட்டியில் தற்போது சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற ஏப்ரல் ஆறாம் தேதி லக்னோ மற்றும் கொல்கத்தா இடையிலான போட்டி நடைபெற அட்டவணை இடப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் போட்டி நடைபெற காவல்துறை சார்பில் அங்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது இதற்கு காரணம் என்னவென்றால் பாஜக சார்பில் மாநிலம் தழுவிய ராம நவமி பேரணி நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது அதனால் அட்டவணையில் மாற்றம் ஏற்படலாம் இந்த போட்டி தள்ளிப் போகலாம் எனவும் தற்போது தகவல் வெளியாகி வருகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram